இனப்படுகொலை நினைவேந்தலில் பிரதமர்!

24 சித்திரை 2025 வியாழன் 12:07 | பார்வைகள் : 376
பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இன்று, இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்கின்றார்.
1915 ஆம் ஆண்டு ஆர்மீனியா மீது துருக்கி செய்த இனப்படுகொலையானது, பிரான்சினாலும் சர்வதேசங்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
பரிஸ் 8 இலுள் ஆர்மீனிய வளாகத்தில் (esplanade d’Arménie) 18h00 மணிக்கு நிகழ உள்ள 110 வது வருட நினைவேந்தலில், அரச சார்பில் பிரதமர் மலர் வளையம் வைத்து உரையாற்ற உள்ளார்.