தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் 18 பேர் பாதிப்பு! குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றம்!

24 சித்திரை 2025 வியாழன் 12:32 | பார்வைகள் : 478
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 12 மணியளவில் Essonne பகுதியில் உள்ள Vigneux-sur-Seine எனும் இடத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்தில், பிரான்சில் 10 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட ‘Sniper 1000’ என்ற பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதால் 18 பேர் விஷவாயுவால் பாதிப்பு அடைந்தனர்.
இதில் 9 பேர் பெரியவர்கள், 9 பேர் குழந்தைகள். 2 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். dichlorvos என்ற உயிருக்கு ஆபத்தான இரசாயனம் கொண்ட இந்தப் பொருள், வீட்டின் உள் பகுதிகளில் பரவி பலரை பாதித்தது.
பூச்சிகளை (Cafards)அழிக்க இந்த பூச்சிக்கொல்லியை நள்ளிரவில் ஒருவர் பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் கட்டிடம் முழுவதும் விசவாயு பரவியதால், குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் அருகிலுள்ள ஒரு ஜிம்னாசியத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். ‘Sniper 1000’ என்ற பூச்சிக்கொல்லி சட்டவிரோதமாக இணையம் மற்றும் சில சந்தைகளில் கிடைப்பதாகவும், இதனை எதிர்காலத்தில் தவிர்க்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.