Paristamil Navigation Paristamil advert login

வானில் தோன்றும் அதிசயம் – இலங்கையர்களுக்கு பார்க்க சந்தர்ப்பம்

வானில் தோன்றும் அதிசயம் – இலங்கையர்களுக்கு பார்க்க சந்தர்ப்பம்

24 சித்திரை 2025 வியாழன் 14:47 | பார்வைகள் : 139


வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, தெரிவித்தார்.

இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, ​​இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும்.

இது ஒரு அரிய சந்தர்ப்பம். வெற்றுக் கண்களால் இவ்வளவு நெருக்கமாக அணுகுவதைக் காண்பதும் அரிது. கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இது தெரியும்.” என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்