Paristamil Navigation Paristamil advert login

கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை; அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான்!

கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை; அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான்!

25 சித்திரை 2025 வெள்ளி 18:49 | பார்வைகள் : 100


இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டது. கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

பாக்., உடனான வாகா- அட்டாரி எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இதனால் பீதி அடைந்த பாகிஸ்தான், கராச்சி கடலோரப் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும் என முப்படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சூரத் போர் கப்பலில் இருந்து துல்லியமான கடல்சார் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளது.

கராச்சி கடற்பகுதியில் பாக்., ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தியா சோதனை நடத்தியது பேசும் பொருளாகி உள்ளது. பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்