சுதந்திர நாட்டில் இப்படி ஒரு சட்டமா?!
29 ஆவணி 2016 திங்கள் 11:31 | பார்வைகள் : 18731
நமது நாட்டில் 15,500 லோ அண்ட் ஓடர்ஸ் ( law and Orders) இருக்கிறதாம். அப்படி உள்ள சட்டங்களில் சிலவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள நேர்ந்தால்... ஓ மை காட்..! பெண்களுக்கு ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது..!! மயக்கம் போட்டு விடாதீர்கள்... மேற்கொண்டு படியுங்கள்..!
பெண்கள் ஜீன்ஸ் அல்லது பாண்ட்.. அப்புறம் 3/4 - என அழைக்கப்படும் முக்கால் காற்சட்டை அணிய தடை! இப்படி ஒரு சட்டம் பிரான்சில் இருந்து தான் இருக்கிறது. 1800 ஆம் வருடம் அது. அப்போதெல்லாம் பெண்கள் பாவாடை.. குட்டை பாவாடை... ஏன் ஸ்விம் சூட் கூட அணியலாம்... ஆனால் ஜீன்ஸ் அணியக்கூடாது! நான்கு தலைமுறைக்கு முற்பட்ட பெண்கள் பெரிதும் சிரமப்பட்டார்களாம்..! குளிர் காலங்களில் என்ன செய்வது..? என்னாவது செய்து கொள்ளுங்கள் ஆனால் ஜீன்ஸ் அணியக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்கள்.
சைக்கிள் ஓட்டும் போது, குதிரை சவாரியின் போது... ம்ஹூம்... எதற்கும் ஜீன்ஸ் அனுமதி இல்லையாம். அப்படி ஏதேனும் அவசியம் ஏற்பட்டால் உள்ளூர் காவல்நிலையத்தில் அனுமதி எடுத்து தான் ஜீன்ஸ் அணிய வேண்டுமாம். அட போங்கப்பா!
இன்னொன்று தெரியுமா??! ஜீன்ஸ் அணிய விதிக்கப்பட்ட தடை இன்னமும் சட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லையாம்... ஙே?? ஆனால் இப்போது அதையெல்லாம் கண்டுகொள்கிறார்கள்... இப்போது ஜீன்சுக்கு தடை விதித்தால் நாடே இரண்டாகிவிடும் போல்!!