காசாவில் தொடரும் வான்வழித் தாக்குதல்கள் - பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலி

25 சித்திரை 2025 வெள்ளி 09:56 | பார்வைகள் : 1839
காசாவில் தொடரும் வான்வழித் தாக்குதல்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காஸாவின் ஹமாஸ் ஆதரவு சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா நகரில் அமைந்திருந்த காவல் நிலையம் ஒன்று இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதலுக்கு இலக்கானது.
இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த இடம், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் கட்டளை மையமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் மேலும் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1