அடிச்சது யோகம்..!! பரிஸ் நகர மக்களுக்கு ஆற்றில் குளிக்க அனுமதி!

26 ஆவணி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21367
இந்த கோடையை சமாளிப்பது பெரும்பாடாய் உள்ளது அல்லவா??! எங்கேனும் ஆத்துல குளத்துல விழுந்து கிடக்கனும் போலே இருக்கல்லவா??! ஓடி வாருங்கள் பத்தொன்பதாம் வட்டாரத்துக்கு!
வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை மறுநாள்) ஒரே ஒரு நாள் 19ம் வட்டாரத்தில் உள்ள Bassin de la Villette ஆற்றில் குளிப்பதற்கு.. ஆசை தீர நீச்சல் அடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோடையை சமாளிக்க பரிஸ் நகர மக்களுக்கு French Swimming Federation (FFN) ஏற்படுத்தி கொடுத்திருக்கும் வாய்ப்புத்தான் இது..!
கூடவே நீச்சல் போட்டியும் உண்டு... நீச்சல் எல்லாம் எனக்கு அத்துப்படி என்றால்... நீச்சலில்... உள்நீச்சல் வெளிநீச்சல் கில்லி கோலி லுங்கி கானாபாட்டெல்லாம் பாடுவீர்கள் என்றால் கை நிறைய பரிசோடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு உங்களுக்கு!
மறந்துவிடாதீர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை... மாலை 3 மணிக்கு!! தவறாமல் வந்துவிடுங்கள்