நோந்த் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு மக்ரோன் ஆறுதல்!!

25 சித்திரை 2025 வெள்ளி 13:49 | பார்வைகள் : 1268
நேற்று நோந்தில் கத்திக் குத்துத் தாக்குதல் நடபெற்ற போது தங்களின் மகளை இழந்த குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களின் குடும்பங்களிற்கும் தனது செய்தியை எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது X தளத்தில்
«நேற்று நோந்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஒரு பதின்மவயதுப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும், அதிர்ச்சியையும், துயரத்தையும் பகிர்ந்து கொள்ளும் குடும்பங்களிற்கும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களிற்கும், ஒட்டுமொத்த கல்விச் சமூகத்திற்கும் எனது இதயபூர்வமான ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் துணை நிற்பேன்.
தங்களின் துணிவான செயலால், மேலதிக சேதங்களைத் தடுத்த ஆசிரியர்களின் துணிவு பாராட்டுக்குரியது. அவர்களிற்கு நான் தலைவணங்குகின்றேன்»
என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.