Paristamil Navigation Paristamil advert login

ஒரு வார்த்தைக்காக ஒரு எழுத்து!

ஒரு வார்த்தைக்காக ஒரு எழுத்து!

24 ஆவணி 2016 புதன் 11:02 | பார்வைகள் : 19325


தொடர்ச்சியாக பிரெஞ்சு எழுத்துக்கள் மற்றும் மொழி தொடர்பான புதினங்களை அறிந்து வருகிறோம். உண்மையில் பல வித்தியாசமான வார்த்தைகளையும் சந்தங்களையும் கொண்டது தான் பிரெஞ்சு மொழி. சரி... இன்று ஆச்சரியமான ஒரு தகவலை பார்க்கலாம்...   ஒரே ஒரு வார்த்தைக்காக ஒரு எழுத்தை உருவாக்கியிருக்கிறார்கள்... அப்படி இல்லையென்றால் அவ் எழுத்தை ஒரே ஒரு வார்த்தையில் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். 
 
"ù" என்பதே அந்த எழுத்தாகும். மேற்கண்ட எழுத்தை வைத்து ஒரே ஒரு வார்த்தையை மாத்திரமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதுவும் இரண்டெழுத்து வார்த்தை தான்! 'où' என்பதே அந்த வார்த்தை. 
 
ஆச்சரியம் தான் இல்லையா..?? பிரெஞ்சில் ù எனும் எழுத்து கொண்ட ஒரே வார்த்தை où ஆகும். சரி... அப்படியென்றால் என்ன..? où என்றால் 'எங்கே?' என்று அர்த்தமாம். 
 
எதிர்காலத்தில் புதிதாக எதேனும் வார்த்தைகள் ù எனும் எழுத்தில் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்