Paristamil Navigation Paristamil advert login

AZERTY எனும் 'விச'ப்பலகை!!

AZERTY எனும் 'விச'ப்பலகை!!

23 ஆவணி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18150


இது ஒரு இடியாப்பச்சிக்கல் விவகாரம். பொதுவா... உலகம் முழுவதும் உள்ள தொலைபேசிகளுக்கும் சரி, கணனிகளுக்கும் சரி.. இல்லை டைப்ரேட்ட்டிங் மெசினுக்கும் சரி QWERTY எனும் ஒரு விசைப்பலகையே (Keyboard) பயன்படுத்துவார்கள். (மூன்று வரி உள்ள உங்கள் விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள 6 எழுத்துக்கள் தான் இந்த QWERTY.)
 
 இதுபோல் உலகில் உள்ள சில மொழிகளுக்கு இந்த விசைப்பலகை மாறுபடும். உதாரணத்தும் நம்ம கதையை எடுத்துக்கொள்வோம். பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் பயன்படுத்துவதற்கென்றே உருவான விசைப்பலை தான் AZERTY. QWERTYஉடன் கம்பேர் பண்ணினால்... இதை பயன்படுத்துவதில் சிலபல சிக்கல்கள் உண்டு. 
 
முக்கியமாக : நீங்கள் காலாகாலமாக QWERTY விசைப்பலகை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால்... AZERTYயை பழகுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். நீங்கள்
'I Love You' என டைப் செய்கிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை..., ஒருவேளை நீங்கள் "a quick pizza' என டைப்பினால் அங்கே, 'q auick piwwq" என எழுதப்பட்டுவிடும். சிக்கல்தான்!!
 
அதை விட இந்த AZERTY விசைப்பலகையில் "@" சின்னத்தை கண்டு பிடிப்பதில் ஏகபோக குழப்பம்.  kannan@gmail.com (மெயில் அனுப்பி விடாதீர்கள்,... சும்மா உதாரணத்துக்கு...) என டை செய்ய வேண்டும் என்றால்... அந்த '@' எங்கே இருக்கு என தேட அரைமணி நேரம் ஆகும். அதே போல் '€' சின்னத்தையும் தேடிப்பிடிப்பதில் சிக்கல் தான். QWERTY பலகை போல் alt + 2 கொடுத்தால், '@' வந்துவிடாது. 
 
நிறுத்திக்கொள்ளுவோம். இங்கே பிரெஞ்சு காரர்களில் 70 வீதமானவர்களுக்கு AZERTY விசைப்பலகை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதாம். குறிப்பாக கனடாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் AZERTY என்றாலே மயக்கம் போட்டுவிடுகிறார்களாம். சரி... ஏன் இப்படி செஸ் போர்ட் மாதிரி காய்களை நகர்த்தி வைத்துள்ளார்கள் என கேட்டால்... பதில் இல்லை...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்