சிக்கலில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்…..

26 சித்திரை 2025 சனி 13:13 | பார்வைகள் : 189
இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். தனது தனித்துவமான இசையில் அடுத்தடுத்த ஹிட் பாடல்களை கொடுத்து கிட்டத்தட்ட 33 வருடங்களாக கோலாட்சி செய்து வருகிறார்.
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும், எத்தனை புது ஸ்டைல்கள் பிறந்தாலும் காலம் கடந்தும் மனதில் நிலைத்து நிற்கக்கூடியது தான் ஏ.ஆர். ரஹ்மானின் இசை. இந்நிலையில் தான் ஏ.ஆர். ரஹ்மான் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வீர ராஜ வீர எனும் பாடல் இடம்பெற்று இருந்தது.
பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களுக்குமே ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது வீர ராஜ வீர பாடல், தன்னுடைய தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவ ஸ்துதி பாடல் என கூறி இழப்பீடு கேட்டு ஃபயாஸ் வாசிஃபுதின் தாகர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மீது பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தான் ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 2 கோடியை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.