ஏலத்தில் வந்த ஏவுகணை!!
21 ஆவணி 2016 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 19592
'ஆலயமணி படத்துல சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா..' என ரீல் விட்டு ஒரு படத்தில் சோப்பு டப்பாவை விற்பனை செய்வார் சூர்யா. அது போல் கிடைக்கும் அனைத்தையும் ஏலத்திற்கு விட்டு சம்பாதிக்க ஒரு கூட்டமும்... 'ஓ ரியலி.. இட்ஸ் எ ஒண்டஃபுல் திங்ஸ்யா..!' என ஆரவாரப்பட்டு மில்லியன் கணக்கில் செலவு செய்து அதை வாங்கி வைத்துக்கொண்டு இருக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.. போகட்டும்!
சமீபத்தில் டைட்டானிக் படத்தில் தோன்றிய கார் என ஒரு ஆதிகாலத்து (ஓடாத) கார் ஒன்றை ஏலத்தில் விட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் யூரோக்களுக்கு விற்பனையானது அந்த கார். அட நிஜமாவே அது ஓடாத கார் தான்!
பிரான்சின் Catz (Manche) நகரில் 2013ஆம் ஆண்டு ஒரு, இரண்டாம் உலகப்போர் சமயம் பயன்படுத்திய ஆயுதங்கள், ட்ரக்குகள், ஏவுகணை, பீரங்கிகள், புல்டோசர்கள் போன்ற யுத்த வாகனங்களை கொண்டு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்தார்கள். இப்போது அந்த மியூஸியத்தை தான் பொது ஏலத்தில் விடப்போகிறார்கள்.
மியூஸியத்தை திறந்தவர்களுக்கு ஏகபோக கடனாம்.. வசூல் வரவில்லையாம்... அதனால் இந்த பொருட்களை (???!!) எல்லாம் ஏலத்தில் விட்டு கடனை அடைக்க திட்டமாம். வாடகை கூட கொடுக்க முடியவில்லை என்றால் பாருங்களேன்..
செம்டம்பர் மாதம் 18ம் திகதி ஏலம் விடப்போகிறார்கள். சும்மா ஃப்ரீயா இருந்தால் சென்று ஒரு பீரங்கி ஒன்றை வாங்கி வையுங்கள்!!