'பிரெஞ்சு முத்தம்!' - உண்மையில் யாருக்கு சொந்தம்?!
20 ஆவணி 2016 சனி 10:30 | பார்வைகள் : 18451
பிரான்ஸ் எங்க இருக்குன்னு தெரியாதவங்களுக்கு கூட, பிரெஞ்சு முத்தம் எப்பிடி இருக்கும்னு தெரியும். காதலுக்கு பெயர்போன காதல் தேசத்தில் பிரெஞ்சு முத்தம் மகா பிரபலம். பிரெஞ்சு முத்தத்தின் தோற்றமும் வரலாறும் ஏலவே பிரெஞ்சு புதினம் தெரிவித்திருந்தது. அதன்படி பிரெஞ்சு முத்தம் பிரான்சில் தோற்றம் பெற்றதாக தெரிவித்திருந்தோம். ஆனால் இப்போது புது பிரச்சனையை கிளப்பியுள்ளார்கள். அதாவது பிரெஞ்சு முத்தம் பிரான்சுக்கு சொந்தமானதல்ல என்பதே அந்த புது பிரச்சனை!!
இது என்ன வம்பாயிற்று??! 'பிரெஞ்சு கிஸ்' என அழைக்கப்படும் முத்தமானது முத்தமிடும்போது உங்கள் பார்ட்னரின் நுனி நாக்கை மேலும் கீழுமாக உரசுதல் (அட... வெட்கப்படாமல் படிங்க பாஸ்...) ஆகும். இதையே ஆங்கிலத்தில் பிரெஞ்சு கிஸ் என அழைக்கிறார்கள். இப்போது என்ன பிரச்சனை என்றால்... அதெப்படி இந்த வகை முத்தத்தை பிரெஞ்சு உரிமை கோரலாம்?? எல்லா நாட்டினரும் அப்படித்தான் முத்தமிடுகிறார்கள்... என ஒரு அமைப்பு கிளம்பியுள்ளது.
உண்மையில் உலகில் முதன் முறையாக தன் நாட்டு மக்களுக்கு பொது இடத்தில் முத்தம் பரிமாறிக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது பிரான்ஸ் தான். முதலாம் உலகப்போர் சமயத்தில் இராணுவ வீரர்கள் தங்கள் மனைவி / காதலிகளை காண ஓடோடி வந்து கட்டித்தழுவி முத்தமிட்டுக்கொண்டார்கள். அப்படியே வைரலாகியது தான் இந்த பிரெஞ்சு முத்தம்.
முதலாம் இரண்டாம் உலகப்போர்கள் முடிவடைந்துவிட்டது. ஆனால் இந்த முத்தச்சத்தம் இன்னும் ஓயவில்லை. அப்போ அந்த அமைப்பின் வாதம்??? அவர்களை எல்லாம் யார் கணக்கில் எடுத்தா??