◉◉ சோம்ப்ஸ்-எலிசேயில் ஏற்பட்ட பாரிய சத்தம்... காவல்துறையினர் குவிப்பு!!

26 சித்திரை 2025 சனி 22:10 | பார்வைகள் : 1189
சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் சற்றுமுன்னர் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 26, இன்று சனிக்கிழமை மாலை 7.45 மணி அளவில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. 8 ஆம் வட்டாரத்தில் உள்ள சோம்ப்ஸ் எலிசே பகுதியில் திடீரென பாரிய சத்தம் கேட்டுள்ளது. ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்று முழக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள கடை ஒன்றில் இருந்து வெளியே பலர் சிதறி ஓடும் காட்சி காணக்கூடியதாக இருந்தது.
உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சில வெளியேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் பட்டாசு வெடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.