ஒரு பில்லியன் யூரோவில் ஒரு வீடு!!
19 ஆவணி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19378
ஐரோப்பாவின் அதிக விலைமதிப்பு கொண்ட வீடு பிரான்சில் இருக்கிறது என சில நாட்கள் முன்னர் பிரெஞ்சு புதினம் தெரிவித்திருந்தது. இப்போது என்ன சொல்கிறோம் என்றால்... உலகில் அதிக விலைமதிப்புக் கொண்ட வீடும் பிரான்சில் தான் உள்ளது!!
நீஸ் நகருக்கு அருகே உள்ள Saint-Jean-Cap-Ferrat பகுதியில் உள்ள ஒரு வீடுதான் விற்பனைக்கு உள்ளது. வீட்டின் விலை ஒரு பில்லியன் யூரோக்கள். உங்கள் வங்கிக்கணக்கில் அத்தொகை இருந்தால் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இதுவே உலகின் அதிக விலை கோரப்படும் வீடாகும் என Nice Matin நாளேடு தெரிவிக்கின்றது.
குறிப்பிட்ட வீடு, ஒரு காலத்தில் பெல்ஜிய மன்னன் Leopold II இன் வசந்த மாளிகையாக இருந்ததாம். "Les Cèdres" என்பது இந்த வீட்டின் பெயர். இங்கு பத்து படுக்கை அறைகள் உள்ளனவாம். 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் தடாகமும், 14 ஹெக்டேயர் அளவு தோட்டமும் உள்ளதாம்.
தற்போது Marnier-Lapostolle குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்ள இந்த வீட்டைத்தான் விற்க இருக்கிறார்களாம். ஒரு பில்லியன் யூரோக்களுக்கு. 1133750000 (இது என்ன அவர்களின் தொலைபேசி இலக்கமா??! என கேட்காதீர்கள்... ஒரு பில்லியன் யூரோக்களை அமெரிக்க டொலர்களுக்கு கன்வேர்ட் செய்து பார்த்தோம்... இப்படித்தான் வந்தது!)