பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி எப்போது; எப்படி?
 
                    27 சித்திரை 2025 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 1565
காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்போது, எப்படி பதிலடி தரப்போகிறது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர், இந்தியாவுக்கு எதிராக பேசிய சில நாட்களில், பஹல்காம் தாக்குதல் நடந்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய விதம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, இது நிச்சயம், பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் போர்வையில் நடத்தியது என்பதை கூற முடியும்.
ஒரு பக்கம், இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுடன், ஹிந்து - முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருந்துள்ளது. இதனால் தான், மதத்தின் பெயரைக் கேட்டு, முஸ்லிம் அல்லாதோரைக் கொன்றுள்ளனர். தற்போதைய நிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில், பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளன. மேலும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து போன்றவை, பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை அடுத்து வரும் மாதங்களில் நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நிச்சயம் அதிரடியான பதிலடி கொடுக்கும் என்பது பாகிஸ்தானுக்கும் தெரியும். ஆனால், அது எப்படி, எப்போது என்பதை தற்போதைக்கு யூகிக்க முடியாது.போர் ஏற்பட்டால், நிச்சயம் இருதரப்புக்கும் இழப்புகளை ஏற்படுத்தும். ராணுவ பலம் உள்ளிட்டவற்றில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில், ரத்தம் இழக்காமல், பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதே, பிரதமர் மோடி அரசின் வியூகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan