பிரெஞ்சு மொழியில் இப்படி ஒரு சிக்கலா?!
18 ஆவணி 2016 வியாழன் 10:41 | பார்வைகள் : 19148
'நாங்கல்லாம் பிரெஞ்ச கரைச்சு குடிச்சு... பழம் தின்று கொட்டையையும் தின்றவங்க!' என சொல்பவர்களா நீங்கள்?! வாங்க... உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம்...!! பிரெஞ்சு மொழியில் அதிக எழுத்துக்களை கொண்ட வார்த்தை எது என டிக்ஷனரியை துலாவினோம்... விடை கிடைத்துவிட்டது! ஆனால் வழக்கத்துக்கு மாறாக இரண்டு பதில் கிடைத்தது.
உயிர் எழுத்துக்கள் அனைத்தையும் கொண்ட மிகச்சிறிய வார்த்தை 'oiseau' ஆகும். A,E,I,O,U ஐந்து எழுத்தும் வருகிறதா? oiseau என்றால் பறவை என்று அர்த்தம்.. போகட்டும்!
பிரெஞ்சு அகராதியில் உள்ள மிகப்பெரும் வார்த்தை 'anticonstitutionnellement' ஆகும். (நீங்களே எழுத்துக்கூட்டி படித்துக்கொள்ளவும். நன்றி!!) மொத்தம் 25 எழுத்துக்களை கொண்ட இந்த வார்த்தைதான் பிரெஞ்சில் மிகப்பெரும் வார்த்தையாகும். இது ஆங்கிலத்தில் உள்ள 'antidisestablishmentarianism' எனும் வார்த்தையை குறிப்பதாகும். மயங்கி விடாதீர்கள்... இது ஆங்கிலத்தில் உள்ள மிகப்பெரும் வார்த்தையாகும்.
அட... இதற்கே என்றால் எப்படி??! பின்னால் ஒருவன் பிலாப்பழத்துடன் வந்துள்ளான் என்ற நாட்டார் கதை போல்... இந்த வார்த்தையை பாருங்கள்... ஆய்வு கூடங்களில் பயன்படுத்துவோமே thiamine ( தயாமின்) அதன் வேதியற் பெயர் தான் இப்போது நீங்கள் வாசிக்கப்போவது.
"aminométhylpyrimidinylhydroxyéthylméthythiazolium"
எங்களுத்தெரியும் இதை வாசிப்பது அத்தனை எளிதில்லை என்று..! வார்த்தையின் உச்சரிப்பை தெரிந்துகொள்ள ஒரு ஐடியா சொல்கிறோம்.. இந்த வார்த்தையை பிரதி செய்து.. கூகுள் ட்ரான்ஸ்சிலேட்டரின் போட்டால்... அது இவ்வார்த்தையை உச்சரித்து காட்டும்! அதன் பின்னர் நீங்கள்.. 'பேசிக்கிட்டிரும்மா... போயி டீ குடிச்சிட்டு வந்துடுறேன்!' என சென்றுவிடுவீர்கள்!