'வாடிவாசல்' மீண்டும் தள்ளிப்போகிறதா?

27 சித்திரை 2025 ஞாயிறு 08:11 | பார்வைகள் : 158
சூர்யாவின் அடுத்த படம் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ’வாடிவாசல்’ இன்னும் தள்ளி போகும் என்று கூறப்படுவதால் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாக்கி வரும் ’சூர்யா 45’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் எது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த ’ரெட்ரோ’ புரமோஷன் விழாவில் தனது அடுத்த படத்தை வெங்கி அட்லுரி இயக்குவார் என்று சூர்யா அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடித்த ’லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ’சித்தாரா என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ’சூர்யா 46’ படத்தை முடித்துவிட்டு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.