மீண்டும் la taxe d’habitation கொண்டு வரப்படுமா?

27 சித்திரை 2025 ஞாயிறு 11:11 | பார்வைகள் : 6945
2023ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட வசிப்பிடவரி (la taxe d’habitation) மீண்டும் அறிமுகப்படுத்தப்படாது என்று பிரான்ஸ் பிரதேச திட்டமிடல் அமைச்சர் பிரான்சுவா ரெப்சாமென் (François Rebsamen) இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் அது மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்திய நல்ல முடிவாக இருந்ததால், அதனை மீளகொண்டு வருதல் பற்றி யோசிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும், நகராட்சிகளில் அரசுப் பணிகளை நடத்த "சிறிய பங்களிப்பு" எதையாவது கொண்டு வர வேண்டியதாயிருக்கும். இது, குடியிருப்பாளர்களும் அவர்களின் உள்ளூர் நிர்வாகத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ள உதவும் என அமைச்சர் விளக்கியுள்ளார்.
2023ஆம் ஆண்டு வசிப்பிடவரி (la taxe d’habitation) நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலம் சார்ந்த வரி (taxe foncière) மட்டுமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஒருவர் வீட்டின் உரிமையாளர் என்றால், அவர் பணக்காரர் என்பது அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 28 திங்கள்கிழமை, பரிஸில் உள்ளூர் நிர்வாக சங்கங்களுடன் கூட்டம் நடத்த உள்ளார். "மக்களுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்கும் இடையிலான நடைமுறையை இலகுவாக்குவதே" இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3