Paristamil Navigation Paristamil advert login

யூத எதிர்ப்புவாதம் - மெலோன்சோனை குற்றம் சாட்டும் அமைச்சர்!!

யூத எதிர்ப்புவாதம் - மெலோன்சோனை குற்றம் சாட்டும் அமைச்சர்!!

27 சித்திரை 2025 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 634


கடந்த சில காலமாக, யூதர்களிற்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அது சில காலமாக மிகவும் அதிகமாகி உள்ளன. இதற்கு முக்கியமாக ஜோன்-லுக்-மெலோன்சோனின்   La France insoumise  கட்சியை நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றார், பெண்கள் மற்றும் ஆண்களிற்காக சமத்துவத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஓரோர் பேர்ஜே (Aurore Bergé).

2023 இலும் 2024 இலும் வருடாந்தம் 1570 இற்கும் மேற்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல்களும, 2022 இல் இதன் மூன்று மடங்குத் தாக்குதல்களும் நடந்திருப்பதாக பிரான்சின் யூத நிறுவனங்களின் பிரதிநித்துவ சபையான CRIF (Le Conseil représentatif des institutions juives de France)  தெரிவித்துள்ளது.

மெலோன்சோன் கட்சியின் தேர்தல் வியூகமே பிரான்சில் யூதத் தாக்குதல்களிற்குக் காரணமகி உள்ளது. இந்த வரலாற்றுத் துரோகத்தை La France insoumise கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் 

என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்