பன்றிகளால் வந்த ஆபத்து!!
17 ஆவணி 2016 புதன் 10:18 | பார்வைகள் : 19549
வீதி விபத்துக்கள் தினமும் தான் இடம்பெறுகிறது. மோதுண்ட வாகங்களுக்கும் அதில் பயணித்தவர்களுகும் ஆபத்துக்கள் நேரும்... அதிகபட்சமாக ட்ராஃபிக் நிரம்பி வழியும்... இதுதானே காலம் காலமாக நாங்கள் பார்க்கும் வீதி விபத்து??!! ஆனால் சில விபத்துக்கள் என்றாவது ஒருநாள் இதுபோன்ற அதிகப்படியான பிரச்சனைகளை கொண்டுவந்து விடுகிறது.
சம்பவம் என்னவென்றால் பரிசுக்கும் Bordeauxக்கும் இடைப்பட்ட A10 சாலையில் நேற்று கனரக வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஏற்பட்ட விபத்தால் அந்த வாகனம் சரிந்து விழுந்துவிட்டது. விழுந்த வாகனத்தின் கண்டைனரில் இருந்து திடும்மென பன்றிகள் சரமாரியாக வெளியேறி சிதறி ஓட ஆரம்பித்துவிட்டன. இறைச்சிக்காக பன்றிகளை ஏற்றி வந்த வாகனம் அது.
சிதறி ஓடிய பன்றிகள் அக்கம் பக்கத்து கிராமத்துக்கள் எல்லாம் ஓடி ஒளிந்துவிட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டதில் வாகன கண்டைனர் பல மீட்டர் தூரத்துக்கு உருண்டுகொண்டு சென்றதால் உள்ளிருந்த பன்றிகள் பெரும் கலவரம் அடைந்துள்ளது. அதனால் ஊருக்குள் வெறித்தனமாக ஓடியிருக்கிறது.
பிறகென்ன..??! மீட்புக்குழு, ப்ளூ கிராஸ், வெட்னரி டொக்டர் என பெரும் பட்டாளம் பன்றிகளை தேடும் முயற்சியில் உள்ளனர்.
பிற்குறிப்பு : வாகன சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், விபத்துக்குரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.