முத்தரப்பு ஒருநாள் தொடர்- முதல் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி..வாகைசூடிய இந்தியா

27 சித்திரை 2025 ஞாயிறு 14:51 | பார்வைகள் : 2176
கொழும்பில் நடந்த மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது.
முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின. கொழும்பில் நடந்த இப்போட்டி மழை காரணமாக 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 38.1 ஓவரில் 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஹாசினி பெரேரா 30 (46) ஓட்டங்களும், கவிஷா தில்ஹார 25 (26) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஸ்னேஹ் ராணா 3 விக்கெட்டுகளும், சாரணி மற்றும் தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா 43 (46) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பிரதிகா ராவல் மற்றும் ஹர்லீன் தியோல் கூட்டணி பொறுப்பாக ஆடியது.
பிரதிகா ராவல் (Pratika Rawal) 62 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும், ஹர்லீன் தியோல் (Harleen Deol) 71 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 29.4 ஓவரில் 149 என இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3