கிராமம் போல் காட்சியளிக்கும் ஒரு வீடு!
16 ஆவணி 2016 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 19442
ஐரோப்பாவிலேயே அதிக விலை மதிப்புக் கொண்ட ஒரு வீடு! கிராமம் போல் காட்சியளிக்கும் ஒரு வீடு!! எங்க இருக்கு?? நம்ம பிரான்சில் தான் இருக்கு..!!
'பபிள்ஸ் வீடு' (சோப்பு நுரையில் வருமே பபிள்ஸ்... அது...) என்பதுதான் இந்த வீட்டின் பெயர். வீட்டை ஹெலிகாப்ட்டர் வியூவில் பார்த்தால் மண் நிறத்திலான முட்டைகள் குவிந்திருப்பது போல் தான் இருக்கும்! Cannes நகரின் கடற்கரையோரம் பார்த்து பார்த்து கட்டியிருக்கும் இந்த வீட்டின் விலை 351.7 மில்லியர் யூரோக்கள் தான்!! ( 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள்)
ஹங்கேரியன் நாட்டைச்சேர்ந்த பிரபல கட்டுமானிகள் வடிவமைத்த வீடு இது. 1975 தொடக்கம் 1989 ஆகிய வருடங்களில் கட்டப்பட்ட இந்த வீட்க்கென ஒரு நீச்சல் தடாகமும் ஒரு மினி 'குளம்'மும் உள்ளதாம்! நீச்சல் தடாகம் ஓகே... பட் குளம்..??! இது கொஞ்சம் ஓவர் தான்!
இந்த கோழிமுட்டை வடிவில் இருக்கும் வீட்டில் எல்லாமே வளைந்து தான் உள்ளது. சோஃபா இருக்கை வளைந்து, கட்டில் வளைந்து.. அட.. வீட்டின் ஜன்னல் கூட வளைந்து தான் உள்ளது. மொத்தம் 91,000 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது இந்த வீடு!