Paristamil Navigation Paristamil advert login

பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல்!!

பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல்!!

27 சித்திரை 2025 ஞாயிறு 20:38 | பார்வைகள் : 800


நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau அறிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற La Grand-Combe பள்ளிவாசலுக்கு இன்று ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு வைத்தே இதனை அறிவித்தார். வெள்ளிக்கிழமை காலை குறித்த நகரில் உள்ள பள்ளிவாசலில் வைத்து இடம்பெற்ற தாக்குதலில் Aboubakar Cissé எனும் இஸ்லாமியர் கொல்லப்பட்டார். 

தப்பி ஓடிய தாக்குதலாளி தேடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமிய மத வெறுப்பு கொண்ட குறித்த தாக்குதலாளி மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்