காலவரையற்ற பணி பகிஷ்கரிப்பில் மருத்துவர்கள்!

27 சித்திரை 2025 ஞாயிறு 22:10 | பார்வைகள் : 546
மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த பகிஷ்கரிப்பு காலவரையற்றது என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பிரான்சின் மருத்துவ மாணவர்களின் தேசிய சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க, அவர்களுடன், தனியார் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பயிற்சியாளர்கள், பிரெஞ்சு மருத்துவ சங்கம், மற்றும் அவசரப் பிரிவு மருத்துவத்துறை போன்ற பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன.
தலைநகர் பரிஸ் உட்பட நாடளாவிய ரீதியில் இந்த பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளது.
“சில பகுதிகளில் மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டால், இறப்புக்கள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு, தொடர்ச்சியான வேலை போன்றவற்றால் மருத்துவர் உலகம் அழுத்தத்தில் இருப்பதாகவும், அரசு அதற்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.