CAF அதிர்ச்சி முடிவு: தானாக இடை நிறுத்தப்படும் உதவிகள்!!

29 சித்திரை 2025 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 7637
குடும்ப நிதி உதவி அமைப்பு (CAF), இரு தொடர்ச்சியான காலாண்டுகளுக்கான (Trimestres) நிதிநிலமையை பதிவு செய்ய தவற விட்ட குடும்பங்களின் நிதி உதவிகள் தானாகவே நிறுத்தும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள், நிதி உதவிகளை பொருத்தமான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கும் நோக்கத்தில் அறிவித்துள்ளது.
RSA, குடும்ப நிதி உதவி( Allocation familiale), வீட்டு வாடகை உதவி(APL) மற்றும் பிற நிதி உதவிகள் இதனால் பாதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை, நிதி மோசடிகளை தடுக்கவும் மற்றும் சரியான பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. CAF கீழ்வரும் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
- பயனாளிகள் தங்களின் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதிகளை கவனித்து, CAF இணையதளம் மற்றும் செயலி(application) மூலம் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- சந்தேகங்கள் இருந்தால் உடனே CAF அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ அணுகலாம்.
மேலும் பயனாளர்கள் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளை இதனால் தவிர்க்க முடியும் எனவும் அறிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025