ஐபிஎல்லில் வரலாற்று படைத்த ஜஸ்பிரித் பும்ரா., மலிங்காவின் சாதனை முறியடிப்பு

28 சித்திரை 2025 திங்கள் 06:05 | பார்வைகள் : 121
ஐபிஎல் வரலாற்றில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனையை படைத்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில், மும்பை (MI) மற்றும் லக்னோ (LSG) அணிகளுக்கு இடையே வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தார்.
ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்காவின் 14 வருட பழமையான சாதனையை முறியடித்துள்ளார்.
பும்ரா, இந்த போட்டியில் மூன்றாம் ஓவரில், LSG-ன் முன்னணி பேட்டர் ஈடன் மார்கிரம் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் IPL வரலாற்றில் மிக அதிக விக்கெட்டுகளைப் பெற்ற பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.
அவர் இப்போது 171 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இது, 2011 முதல் இந்த ரெக்கார்டை வைத்திருந்த லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்தது.
இதுமட்டுமின்றி, பும்ரா IPL வரலாற்றில் ஒரே அணிக்கான அதிக விக்கெட்டுகளை பெற்ற பாசருடன் இணைந்துள்ளார்.