ஒர் எழுத்தில் ஒரு ஊர்!
14 ஆவணி 2016 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 19719
நேற்று, நீ......ண்ட பெயர் கொண்ட ஒரு கிராமத்தை பற்றி தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?! இன்று ஒரே ஒரு எழுத்தில் பெயர் கொண்ட ஒரு கிராமத்தை பற்றி தெரிந்துகொள்வோம்!
அதற்கு முன் : ஒரு எழுத்தில் பெயர் இருப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. இது குறித்து இணையத்தை துருவினால்... 'Å' எனும் பெயரில் நோர்வேயில் மாத்திரம் ஏழு நகரங்கள் உள்ளனவாம். அமெரிக்காவில் 'D' எனும் நகரம், வியட்னாம், சீனா, இத்தாலி என இந்த ஒற்றை எழுத்து கிராம லிஸ்ட் நீள்கிறது. சரி... பிரான்சில்??
Somme மாவட்டத்தின் Péronne எனும் ஒரு வட்டாரம் உள்ளது. அங்கே தான் இருக்கிறது இந்த ஒண்டிப்புலி கிராமம். கிராமத்தின் பெயர் 'Y' ஆகும்! (ஐ) 2006ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி இக்கிராம்த்தில் 86 பேர் வசித்தார்களாம். 1990 ஆம் ஆண்டில் இது 82 பேராக இருந்து தற்போது அதிகரித்துள்ளதாம். அடேயப்பா!!
2020 ஆம் ஆண்டு வரை Vincent Joly என்பவர் நகர முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். வசிக்கும் நூறுக்கு உட்பட்ட மக்களுக்காக ஒரு தேவாலயம், ஒரு காவல்நிலையம்... ஒரு தொடருந்து நிலையம்... எல்லாமே ஒற்றை என்பதாலோ என்னவோ பெயரும் ஒற்றை எழுத்திலேயே வைத்துவிட்டார்கள் போலும்!!