பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி'
28 சித்திரை 2025 திங்கள் 12:57 | பார்வைகள் : 4003
சசிகுமார், சிம்ரன் நடித்த ’டூரிஸ்ட் ஃபேமிலி” என்ற திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் அவர்கள் பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு பாராட்டியுள்ளார். இந்த படத்தின் முதல் விமர்சனம் என கூறப்படும் இந்த விமர்சனத்தில் கூறியதாவது:
’டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.
முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “டூரிஸ்ட் ஃபேமிலி” மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்!
கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது


























Bons Plans
Annuaire
Scan