சிம்புவின் 49-வது படத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

28 சித்திரை 2025 திங்கள் 15:01 | பார்வைகள் : 142
சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தில், மிருணாள் தாக்குர் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்புவின் பிறந்தநாள் அன்று அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியான நிலையில், அதில் ஒரு படம் தான் சிம்புவின் 49வது படம். இதில், அவர் கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதனால் தாடியை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் நாயகியாக காயடு கோஹர் நடிப்பார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில், இவர் நாயகியாக நடித்திருந்தார் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, மாஸ் நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி நடிகை என கோலிவுட் திரையுலகம் அவரை பற்றி பெருமையுடன் பேசி வருகிறது. மேலும், இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு, சாய் அபிநயங்கார் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.