Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புத்தகங்கள் படிப்பதன் மூலம் உண்மையிலேயே சாதிக்கலாமா?

புத்தகங்கள் படிப்பதன் மூலம் உண்மையிலேயே சாதிக்கலாமா?

28 சித்திரை 2025 திங்கள் 14:35 | பார்வைகள் : 3150


புத்தகம் மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.‌ இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் முடியும் முடியாது என பதிலளிப்பது கடினம். ஏனெனில் சாதிப்பது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் அவர்களின் முயற்சிகளைந் பொறுத்தது. இருப்பினும், புத்தகம் படிப்பதன் மூலம் நம் அறிவு, திறன்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய பார்வைகள் போன்றவற்றை சரியாக அமைத்துக்கொள்ள உதவுகின்றன என்பதை மறுக்க முடியாது.

புத்தகங்கள் நமக்கு அபரிமிதமான அளவு தகவல்களை வழங்குகின்றன. வரலாறு, அறிவியல், கலை இலக்கியம் என பல்வேறு துறைகளில் நமது அறிவை விரிவுபடுத்திக்கொள்ள புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்களை படிக்கும் போது நாம் பல்வேறு கதாபாத்திரங்களின் மனதில் நுழைந்து அவர்களின் சிந்தனை முறைகளைப் புரிந்து கொள்கிறோம். இது நம்முடைய சொந்த சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.

புத்தகங்களில் உள்ள கற்பனை உலகங்கள் நம்முடைய படைப்பாற்றலைத் தூண்டுகின்றன. இவை புதிய யோசனைகள், கண்டுபிடிப்புகள், போன்றவற்றிற்கு நம்மை தயார் படுத்துகின்றன. புத்தகங்களை அதிகமாக படிப்பதன் மூலம் நம்முடைய சொல்லாற்றல், எழுத்தாற்றல் மேம்படும். புதிய சொற்களை கற்றுக் கொள்ளவும், வாக்கியங்களை சரியாக அமைக்கவும் இது உதவுகிறது.

புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், வெற்றிகள் போன்றவற்றை படிக்கும்போது நாம் உணர்வுபூர்வமாக உறுதியானவர்களாக வளர்கிறோம்.

புத்தகங்கள் நமக்கு அறிவுத் திறன்கள், வாழ்க்கை பற்றிய புரிதல் போன்றவற்றை வழங்கினாலும், அவை மட்டுமே வெற்றியை உறுதி செய்வதில்லை. வெற்றி என்பது பல காரணிகளைப் பொறுத்தது. உழைப்புக்கு திறமை, வாய்ப்பு, சூழல் போன்ற பல காரணிகள் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புத்தகங்கள் நமக்கு ஒரு நல்ல அடித்தளத்தைத் அமைக்கின்றன.‌ ஆனால் வெற்றியை அடைய நாம் தொடர்ந்து முயற்சி செய்தாக வேண்டும். 
                                                                                                                                                                                                                                                                                  எனவே, புத்தக வாசிப்பு என்பது ஒருவர் தன் வெற்றியை உறுதி செய்யும். ஆனால், புத்தகங்களை படிப்பதால் மட்டும் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட மாட்டீர்கள். படிக்கும் விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.  புத்தகங்கள் நமக்கு ஒரு வழிகாட்டி. அது நம்மை நம் இலக்கை நோக்கிய பயணத்தில் வழிநடத்த உதவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்