Paristamil Navigation Paristamil advert login

'டைட்டானிக்' - பிரான்சில் செய்த சாதனை!

'டைட்டானிக்' - பிரான்சில் செய்த சாதனை!

12 ஆவணி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18546


ஜேம்ஸ் கேமரூன் எடுத்த காதல் காவியம் டைட்டானிக் உலகம் முழுவது வசூல் செய்து சாதனை படைத்தது! அவதார் வெளியாகும் முன்னர் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக அது இருந்தது! உலகின் சிறந்த பத்து காதல் திரைப்படங்களை பட்டியலிட்டால், அதற்குள் டைட்டானிக் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட டைட்டானிக், காதல் தேசமான பிரான்சில் வெளியானது...!! 'ரெக்கார்ட் பிரேக்' செய்தது!!
 
 
இதுவரை வெளியான பிரெஞ்சு திரைப்படங்களில் வசூல் நிலவரங்களில் முன்னனியில் இருப்பது Bienvenue chez les Ch'tis திரைப்படமாகும். 2008 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தயாராகி,  245,144,417 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்தது. (According  Wikipedia) பிரெஞ்சு சினிமாக்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் இது! இருக்கட்டும்!! 
 
Bienvenue chez les Ch'tis திரைப்படம் வெளியானபோது டைட்டானிக் பிரான்சில் செய்த சாதனையை உடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது முடியாமல் போனது. பெரிதாக ஒன்றும் இல்லை... ஒரு நூல் இடைவெளியில் தான்!!   Bienvenue chez les Ch'tis திரைப்படத்துக்கு பிரான்சில் 20,489,303 டிக்கெட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!  ஆனால் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் திரைப்படத்துக்கு   21,774,181 டிக்கெட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன. 1997 இல். 
 
பிரான்சில் இதுவரை அதிக டிக்கெட்டுக்கள் விற்பனையான திரைப்படமாக டைட்டானிக்கே இருக்கிறது. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் Bienvenue chez les Ch'tis திரைப்படம் உள்ளது. எதிர்வரும் காலங்களில் டைட்டானிக் ரெக்கார்டை உடைக்குமா பிரெஞ்சு சினிமா?!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்