மே மாத விடுமுறைகள்: ஓய்வா? அல்லது சம்பளத்தில் குறைவா?

29 சித்திரை 2025 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 112
2025 மே மாதம் நான்கு தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளிகளுக்கு ஓய்வு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் இதனால் சம்பளத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.
- மே 1 மட்டும் கட்டாய ஓய்வு நாளாகும்; வேலை செய்யவில்லை என்றால் முழு சம்பளம் கிடைக்கும். வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும்.
- மற்ற விடுமுறை நாட்களில், மூன்று மாதம் வேலை செய்து கொண்டிருப்பின் சம்பளக் குறைவு ஏற்படாது. சில ஒப்பந்தங்களில் வேலை செய்தால் கூடுதல் பணம் வழங்கப்படும், ஆனால் அது கட்டாயம் இல்லை.
- La journée de solidarité (மே 25) நாளில் வேலை செய்தாலும் கூடுதல் சம்பளம் வழங்கப்படாது.
தற்காலிக ஊழியர்களுக்கு கூட, வேலை நாட்களில் விடுமுறை வந்தால் சம்பளம் வழங்கப்பட வேண்டும். வருடாந்திர விடுப்புகளுக்கு இடையில் விடுமுறை நாள் வந்தால், அது விடுப்பு நாள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.