Paristamil Navigation Paristamil advert login

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை - பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை -  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்

29 சித்திரை 2025 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 2223


35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை -  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.

கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட   பலாலி வீதி வரை இன்றைய தினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்