இஸ்லாத்திற்கு ஆதரவாக தேசியப் பேரணி - ஜோன்-லுக் மெலான்சொன் -

29 சித்திரை 2025 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 4659
பள்ளிவாசற் கொலையின் பின்னர் கொலையாளியே சரணடைந்த பின்னரும், எதிர்வரும் மே 11ம் திகதி தேசியப் பேரணி ஒன்றை நடாத்த அழைப்பு விடுத்துள்ளார் La France insoumiseகட்சியின் தலைவர் ஜோன்-லுக்-மெலோனசோன். ஒரு தனிப்பட்ட ஒருவனின் நடவடிக்கையைப் பயன்படுத்தி பிரான்சில் இஸ்லாமியர்களிற்கு ஆபத்து என மெலோன்சோன் பேசி உள்ளார்.
இஸ்லாமியர்களின் ஏகப் பிரதிநிதி தான் என்று இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்கின்றார்.
இவர் கொலை செய்யப்பட்ட உடலத்தின் மீது அரசியல் செய்கின்றார் என்றும், இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் ஆசியரியர்கள், மதகுருக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், யூதர்களின் மீது ஏற்படும் தாக்குதல்களின் போதும், இவர் எதுவும் பேசுவதில்லை என பல அரசியற் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
அத்துடன் இவர் பேசும் கருத்துக்கள் தான், யூதர்களின் மீதான தாக்குதலை அதிகரிக்கச் செய்துள்ளது என, அமைச்சர் ஓரோர் பேர்ஜே பகிரங்கமாகக் குற்றச் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025