Paristamil Navigation Paristamil advert login

ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி

ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி

29 சித்திரை 2025 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 120


ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி, நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
 
 முதலில் துடுப்பாட்டம் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தார்.

210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தார்.

210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின் மூலம், பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

35 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில், அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், அதிவேக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில், 30 பந்துகளில் சதமடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், 37 பந்துகளில் சதமடித்து யூசுப் பதான் 2வது இடத்திலும் இருந்தனர்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் இள வயதில் சதம், அரைசதம் அடித்த வீரர், சர்வதேச T20 கிரிக்கெட்டில் இள வயதில் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக 19 வயதில் மனிஷ் பாண்டே சதமடித்தது இள வயது ஐபிஎல் சதமாகவும், 17 வயதில் ரியான் பராக் அரை சதம் அடித்ததே இள வயது அரை சதமாகவும் இருந்தது. இந்த சாதனைகளை நேற்று வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

ஒரு போட்டியில், அதிக சிக்ஸ்(11 சிக்ஸ்) அடித்த இந்திய வீரர் என்ற முரளி விஜயின் சாதனையை, சமன் செய்துள்ளார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில், குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் (3வது இன்னிங்ஸ்) சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 2025 ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிபட்ச ரன்கள் (30 ரன்கள்) என்ற சாதனையை படைத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் நேற்றைய அதிரடி ஆட்டத்தை, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், யூசுப் பதான், முகம்மது ஷமி, ஹர்பஜன் சிங், கூகிள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.
 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்