Paristamil Navigation Paristamil advert login

இனி ஒரே WhatsAppல் இரண்டு கணக்குகளை பயன்படுத்தலாம்.., எப்படி தெரியுமா?

இனி ஒரே WhatsAppல் இரண்டு கணக்குகளை பயன்படுத்தலாம்.., எப்படி தெரியுமா?

29 சித்திரை 2025 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 138


WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது.

இந்நிலையில், பல பயனர்கள் தற்போது இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் இயக்க விரும்புகின்றனர்.

இதற்கு முன்னர் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த மூன்றாம் தரப்பு ஆஃப்களை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது, வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக, ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு கணக்குகளைச் சேர்க்கவும், தனித்தனியாக அதை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

முதலில் உங்களின் வாட்ஸ்அப் செயலியில், வலதுபுறத்தின் மேல் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும்.

அதில் அக்கவுண்ட் (Account) ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களுக்கு ஆட் அக்கவுண்ட் (Add Account) ஆப்ஷன் தெரியும்.

அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது வேறு ஒரு வாட்ஸ்அப் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் உங்களது போனில் இரண்டு வாட்ஸ்அப் எண்களை பயன்படுத்த முடியும்.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்