செத்ததுக்கப்புறமும் உயிரை வாங்குறாங்கப்பா!!
11 ஆவணி 2016 வியாழன் 11:53 | பார்வைகள் : 19863
Pokemon Go விளையாட்டு தான் இப்போது மகா பிரபலம்! ஸ்மார்ட் போன் உள்ள அனைவதும் Pokemon'ஐ தேடி அலைகிறார்கள்! நீங்கள் வசிக்கும் பகுதி அப்படியே திரையில் தோன்றும் அங்கெல்லாம், நீங்கள் வேட்டையாடவேண்டிய விலங்குகள் இருக்கும். நீங்கள் வேட்டையாடவேண்டும். இப்படியே வீதியெங்கும் விளையாடிச்செல்லவேண்டியதுதான்.
பரிசுக்குள் உள்ள அனைத்து இடங்களிலும் உங்கள் வேட்டையைத் தொடரலாம். ஓகே.. அதை விடுங்கள் இப்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. முதலாம் உலகப்போரின் போது இறந்த பிரெஞ்சு வீரர்களின் துயிலும் இல்லம் அமைந்துள்ள Douaumont ossuary பகுதியில் Pikemon விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'இராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும்!' என எழுந்த பல குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, அப்பகுதியில் Pokemon விளையாட முடியாதபடி Pokemon நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும் அங்கு இணைய பாவனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக Pokemon விளையாட்டால் பலர் விபத்துக்குள்ளாகுவதும், எங்கேனும் கொண்டுபோய் கார்களை இடித்துக்கொள்வதுமாய் இருக்கும் நிலையில்... இராணுவ வீரர்களின் நிம்மதியை குலைப்பானேன்??