'பிரெஞ்சே வெளியே போ!' - பிரித்தானியாவில் ஒரு குழறுபடி!
10 ஆவணி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 18950
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியிருக்கும் தகவல் நீங்கள் அறிந்ததே!! இதை சாட்டாக வைத்து பிரித்தானியாவுக்குள் பரவிக்கிடக்கும் பிரான்ஸ் சம்மந்தப்பட்ட அனைத்தையும் வெளியேற்றுவதற்கு சிலர் தீயாய் உழைக்கின்றனர். இந்த துவேசம் சிறிது சிறிதாய் ஆரம்பித்து தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக இணையத்தளத்தில்!!
இதை பாருங்கள்! பிரித்தானியாவின் பாஸ்போர்ட்டில் மொத்தம் 11 பிரெஞ்சு வார்த்தைகள் இருக்கின்றனவாம். அதுவும் பெயர் விபரங்கள் உள்ள பகுதியிலேயே! இது போதாதா ஆர்ப்பாட்டம் பண்ண??! "ரத்து செய் ரத்து செய்.. பிரெஞ்சு வார்த்தையை ரத்து செய்!" என வீதியில் இறங்காத குறையாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம்.
'Dieu et mon droit', 'Honi soit qui mal y pense' போன்ற வார்த்தைகள் பாஸ்போர்ட்டில் உள்ளதால் அதை அடுத்து வரும் புதிய பிரிண்டில் தவிர்க்கவும், அதற்கு பதிலாக ஆங்கில வார்த்தைகளை மட்டும் சேர்க்கவும் பெட்டிஷன் மேல் பெட்டிஷன் அனுப்புகிறார்களாம் அந்நாட்டு சிட்டிஷன்(கள்!)
இருந்தாலும் பிரித்தானிய மேல்மட்டம் இது குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கிறது.பிரித்த்தானியாவில் அதிகம் விரும்பிக் கற்கப்படும் இரண்டாவது மொழியாக பிரெஞ்சே உள்ளது.
இந்நிலையில் இணையவாசிகளின் கருத்தை பிரித்தானிய அரசு கணக்கெடுக்காது என்றே சொல்லப்படுகிறது.