Paristamil Navigation Paristamil advert login

வியப்பூட்டும் விஞ்ஞானம்!! - Cité des Sciences et de l'Industrie!!

வியப்பூட்டும் விஞ்ஞானம்!! - Cité des Sciences et de l'Industrie!!

7 தை 2017 சனி 10:30 | பார்வைகள் : 19290


வரலாறுகள்... ஓவியங்கள்.. சிற்பங்கள் என இதுவரை பல அருங்காட்சியகங்களை பார்த்த நாம்... இன்று விஞ்ஞானத்தில் வியப்பூட்டும் ஒரு அருங்காட்சியகம் குறித்து பார்க்கலாம்...!! 
 
பரிசின் Parc de la Villette இல் அமைந்துள்ள Cité des Sciences et de l'Industrie அருங்காட்சியகமே ஐரோப்பாவின் மிகப்பெரிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமாகும். ஆஹா.. நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!!
 
எத்தனையோ ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இங்கு கொட்டிக்கிடம்கின்றன. கோள்கள், நீர்மூழ்கிகள், நட்சத்திரங்கள், வானியல் என வேறுவிதமான உலகத்தை இங்கு பார்க்கலாம். அனுபவிக்கலாம். iMAX திரையரங்கு வேறு இங்கு உள்ளது. 
 
1986 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புனரமைக்கப்பட்டு இன்று 'ஒரு நாள்' முழுவதையும் இங்கேயே செலவு செய்வதற்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளார்கள்.
 
ஒரு 'மினி' நூலகம் ஒன்று இங்கு உள்ளது. முழுக்க முழுக்க விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்கள் இங்கு இறைந்து கிடக்கின்றன. மேலும், ஒரு உணவகம், ஒரு பெரிய அரங்கு, கோளரங்கம் என பல பகுதிகள் இங்குண்டு. 
 
இந்த விஞ்ஞான அருங்காட்சியகத்தை தற்போது நிர்வாகித்து வருபவர், பிரபல பிரெஞ்சு மருத்துவர் மற்றும் விண்வெளி வீராங்கனை Claudie Haigneré ஆகும். இவர் 25 நாட்களும் 14 நிமிடங்களும் விண்வெளியில் இருந்துள்ளார். 
 
வருடத்துக்கு ஐந்து மில்லியன் பேர் வருகை தரும் இந்த அருங்காட்சியகத்துக்கு இந்த வார விடுமுறையில் ஒருதடவை வந்து செல்லலாமே!!
முகவரி : 30 Avenue Corentin Cariou, 75019 Paris, 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்