Paristamil Navigation Paristamil advert login

யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்

யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்

5 சித்திரை 2025 சனி 05:24 | பார்வைகள் : 249


யாருடனும் கூட்டணி இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: வக்ப் திருத்த மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறுவதும் அவர்களுக்கு ஆதரவாக மாறிவிடும். எதிர்நிலை வாக்கு தான். அதற்கு எதிராக இருக்கும். ஜி.கே.வாசன் எதற்கு அந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அது தவறான முடிவு.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள். நாங்களும் ரத்து செய்ய முடியாது என இவர்களும் சொல்லிவிட்டார்கள்.தேர்தல் வரும்போதுதான் நீட் தேர்வு பற்றி பேசுவார்களா? என்ன கொடுமை என்று பாருங்கள். இப்பொழுது இந்த தீர்மானத்தை போட்டு யாரிடம் கொண்டு செல்வார்கள். இதெல்லாம் வெற்று தீர்மானங்கள். இந்த நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது யார்? முதலில் கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.,வும் தான்.

காங்கிரஸ் கொண்டு வந்தது அப்பொழுது கூட இருந்தது யார்? 'அன்னைக்கே அந்தப்பக்கம் 'நீட்'டுனு சொல்லாம, இந்தப்பக்கம் 'நீட்'டுனு சொன்னது யார்? நீட் தேர்வுக்கு ஆதரவாக கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார். தேர்தல் வரும்போது நீட் தேர்வுக்கு எதிரானது கச்சத்தீவுக்கு எதிரானது என தீர்மானம் போடுவார்கள். தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது போல் எதற்கு நீட் தேர்வுக்கு எதிராக கூட்டவில்லை என நான் அன்று கேட்டேன். அதற்காக இப்பொழுது அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார்கள்.

கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட்டு கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியாக இருப்பதை விட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து செத்து போவது மேல். நான் சிங்கமும் இல்லை. யாருடனும் கூட்டணி இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன். இவ்வாறு சீமான் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்