Sèvres : வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்துவிட்டு - €300,000 கொள்ளை!!

4 சித்திரை 2025 வெள்ளி 14:08 | பார்வைகள் : 1280
Sèvres (Hauts-de-Seine) நகரில் உள்ள வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. €300,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று ஏப்ரல் 3, வியாழக்கிழமை நள்ளிரவு மூன்று கொள்ளையர்கள் ஆயுதத்துடன் வீடொன்றுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்த தம்பதியினர் இருவர் மற்றும் அவர்களது பிள்ளைகளை கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் சென்றதன் பின்னரே அவர்கள் தங்களை விடுவித்துக்கொண்டு காவல்துறையினரை அழைத்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் Hauts-de-Seine மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.