பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் திடீர் கைது.. காரணம் என்ன?

4 சித்திரை 2025 வெள்ளி 14:01 | பார்வைகள் : 412
பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான தர்ஷன் காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். அதன் பிறகு, அவர் ’கூகுள் குட்டப்பா’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் தர்ஷன் மீது கார் பார்க்கிங் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் பார்க்கிங் செய்வதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறின்போது, நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி, அவரது மனைவி லாவண்யா, மற்றும் மாமியார் ஆகிய மூவரையும் தர்ஷன் தாக்கியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், காவல்துறையில் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், நீதிபதியின் மகன், அவரது மனைவி, மற்றும் அவரது மாமியார் ஆகிய மூவரும் ஆபாசமாக, தரக்குறைவாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர்கள் மூவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தர்ஷன் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ஷன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமும் அவரது நண்பர்களிடமும் ஜேஜே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.