SNCF: வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கம்!!

4 சித்திரை 2025 வெள்ளி 15:19 | பார்வைகள் : 1221
Sud-Rail தொழிற்சங்கம் தனது ஊழியர்களை வேலை நிறுத்தத்துக்கு அழைத்துள்ளது. மே மாதம் 7 ஆம் திகதி புதன்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறைகளைக் கொண்ட வாரம் என்பதால், இந்த வேலை நிறுத்தம் பயணிகளிடையே பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. சாரதிகளுக்கான ஊதியத்தை உயர்த்துமாறு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது SNCF நிறுவனத்தின் 33% சதவீத ஊழியர்களைக் கொண்ட Sud-Rail தொழிற்சங்கம், "சாரதிகளை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உடலநலக்குறைவினால் விடுமுறை எடுத்தாலும் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
மே 6 ஆம் திகதி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வேலை நிறுத்தம், மே 8 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.