தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் கண்டனப்பிரேரணை

4 சித்திரை 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 276
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்இயோலிற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் நிறைவேற்றிய அரசியல் கண்டனப்பிரேரணை சரியானது என அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் அரசமைப்பு நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
யூன் மார்ஷல் சட்டத்தை அறிவித்தவேளை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
யூன் தேசிய அவசரகால சட்டங்களை பயன்படுத்தியதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.