Paristamil Navigation Paristamil advert login

பூண்டு சாதம்

பூண்டு சாதம்

4 சித்திரை 2025 வெள்ளி 15:52 | பார்வைகள் : 233


எப்போதும் மதியம் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் என்று சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியென்றால் இன்று மதியம் வெரைட்டி ரைஸ் ஏதாவது சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

பூண்டு சாதம் காரசாரமான சுவையில், சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டாக இருக்கும். முக்கியமாக இந்த பூண்டு சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, ரொம்பவே சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. மதியம் உணவாக குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு இந்த பூண்டு சாதத்தை செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்: பூண்டு -150 g மிளகு -30g சீரகம் -30g உப்பு தேவையான அளவு நெய் -100ml கருவேப்பிலை

செய்முறை: முதலில் சீரகத்தை நன்றாகப் பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மிளகினையும் நன்றாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு சாதத்திற்கு சுவை தர வேண்டுமெனில், பூண்டு மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய கடாயில் நெய் ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு, இடித்து வைத்திருந்த பூண்டினை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்திருந்த மிளகு, சீரகப் பொடி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதன் பிறகு சூடாக வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், சுவையான ஆரோக்கியமான அட்டகாசமான பூண்டு சாதம் தயாராகிவிடும். இதனை அப்படியே சூடாக குழந்தைகளுக்கு பரிமாறினால் விரும்பி சாப்பிடுவார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்