Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் 'குட் பேட் அக்லி டிரைலர் வெளியீடு

அஜித்தின் 'குட் பேட் அக்லி டிரைலர் வெளியீடு

4 சித்திரை 2025 வெள்ளி 16:05 | பார்வைகள் : 175


நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.