இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் மோடி

4 சித்திரை 2025 வெள்ளி 16:49 | பார்வைகள் : 1001
இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.