Paristamil Navigation Paristamil advert login

மீளாய்விற்குச் செல்லும் மரின் லூப்பன்!! தண்டனை தேர்தல் உத்தியா - ஆய்வு

மீளாய்விற்குச் செல்லும் மரின் லூப்பன்!! தண்டனை தேர்தல் உத்தியா - ஆய்வு

5 சித்திரை 2025 சனி 08:31 | பார்வைகள் : 869


தேசியப் பேரணியான சுN (சுயளளநஅடிடநஅநவெ யெவழையெட) கட்சியின் ஐரோப்பியப் பராளுமன்ற உறுப்பினர்களின் உதவியானளர்களிற்கு வழங்கிய ஊதியம் என்ற பெயரில் நிதி மோசடி செய்ததாக, அதன் தலைவி மரின் லூப்பன், மற்றும் அவரது நிதிப்பொறுப்பாளர் உட்பட 24 பேர் குற்றவாளிகள் எனத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் மரின் லூப்பன் உட்பட 9 பேர் மேல் முறையீட்டிற்குச் செல்ல உள்ளனர். இவர்களது வழக்கு 2026 ஆம் ஆண்டு மீள் விசாரணை செய்யப்பட உள்ளது.
மரின் லூப்பன் மீதான குற்றச்சாட்டு மீண்டும் நிரூபிக்கப்பட்டால் அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதன் மூலம் மக்ரோனின் கட்சி மற்றும் இடதுசாரிகளின் முக்கிய எதிர்ப் போட்டியாளர் களத்தில் இருந்து நீக்கப்படுவார்.

மக்ரோனின் இரண்டாம் ஆட்சிக்கான் தேர்தலில் இரண்டாம் சுற்றில் மரின் 
லூப்பனைவிட மிகவும் சொற்பமான வீத்தால் மட்டுமே மக்ரோன் வெற்றி பெற்றிருந்தார என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே உத்தி தொடர்ந்து வந்துள்ளது வரலாறு.

மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல் போட்டியானர் எனக் கருதப்பட்ட தொமினிக் ஸ்ரொளஸ்கான், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அமெரிக்காவின் விடுதியில் ஒரு பணிப் பெண்ணைப் பலாத்காரம் செய்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு தேர்தல் களத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

லொரோன் பயியுஸ் மீதும் இதே நிதிமோசடி வழக்குப் போடப்பட்டுத் தேர்தல் நேரத்தில் தண்டிக்கப்பட்டார்.

மக்ரோனின் இரண்டாம் காலத்திற்கு முதல் சார்க்கோசி மீது தண்டனை உறுதி செய்யப்பட்டு அவரிற்கு இலத்திரனியல் வளையம் இடப்பட்டு நீக்கப்பட்டார்.
ஆனால் மக்ரோனின் முதல் ஆட்சி முடியும் தறுவாயில் அவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அது காற்றோடு கரைந்து காணாமல் போனது.

மரின் லூப்பன் தன்மீது குற்றம் சாட்டித் தண்டனை வழங்க முயல்வது வெறும் மோசமான அரசியல் எனக் குற்றம் சாட்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்