மெக்சிகோவில் மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு

5 சித்திரை 2025 சனி 08:41 | பார்வைகள் : 166
மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் சாதாரண காய்ச்சலாகக் கருதி, காய்ச்சல் எதிர்ப்பு மருந்துடன் கூடிய சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததுள்ளது. சிறுமிக்கு எவ்வாறு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சிறுமியின் வீட்டருகே உள்ள பறவைகளை மருத்துவத்துறை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
விலங்குகள் மற்றும் மனிதர்கள் மூலமாக எச்5என்1 வகை இன்ச்ளூயன்சா பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கடந்தாண்டில் இருந்து அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிக்கபட்டவர்கள் குறைந்தபட்சம் 70பே ர் வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.